--- --:--:-- --

கொரோனா நேரத்தில் தி.மு.க.வினர் கீழ்தரமான அரசியலை நடத்துகின்றனர் என்று மதுரை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.சரவணன் பேச்சு!

16

மதுரை தெற்கு தொகுதி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கீழவாசல், முனிச்சாலை பகுதிகளில் உள்ள மக்களுக்கு ஜிங்க் மாத்திரைகள், கபசுப சூரணம், வைட்டமின் மாத்திரைகள் மற்றும் ஹோமியோபதி ஆல்பம்- 30 மாத்திரைகளை அரசின் பரிந்துரையின் படி, மதுரை மாநகராட்சி கமிஷனர் விசாகன் முன்னிலையில் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் முனைவர் எஸ்.எஸ்.சரவணன் வழங்கினார்.

 

இந்நிகழ்ச்சியின் போது எஸ்.எஸ்.சரவணன் எம்.எல்.ஏ. கூறியதாவது : கடந்த 3 மாதங்களாக முதல்வர் இரவு பகல் பாராது இந்த நோய் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார். அவருக்கு உறுதுணையாக துணை முதலமைச்சரும் செயல்பட்டு வருகிறார். தமிழக அரசின் திட்டங்களை எல்லாம் அனைத்து மாநிலங்களும் பாராட்டி வருகிறது. அப்படிப்பட்ட சூழ்நிலையில் ஏதாவது குற்றம் காண வேண்டும் என்ற நோக்கத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தவறான பிரச்சாரங்களை செய்து வருகிறார்.

 

மேலும் கடந்த 3 மாதங்களாக தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் அரசின் சார்பில் 3,280 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதில் மு.க.ஸ்டாலின் உள்பட அனைத்து தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் தொகுதிகளில் உள்ள பொதுமக்களும் பயன்பெற்று முதலமைச்சரை பாராட்டி வருகின்றனர்.

 

இதே நிலை நீடித்தால் வருகின்ற 2021–ம் ஆண்டு பொது சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. ஒரு இடங்களில் கூட ஜெயிக்க முடியாது என நினைத்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் ஒன்றிணைவோம் வா என்ற திட்டம் பெயரில் மக்களுக்கு உதவுவது போல் நாடகம் ஆடினார்.

 

இதில் 98,752 மனுக்களை தி.மு.க.வினர் போலியாக தயாரித்து அதை தலைமைச் செயலகத்தில் கொடுத்தனர். அதில் விசாரிக்கப்பட்டதில் மக்கள் நாங்கள் மனு கொடுக்கல்லை என்று தெரிவித்தனர். இப்படி ஒரு கீழ்த்தரமான அரசியலை தி.மு.க.வினர் நடத்தி வருகின்றனர். என்று எஸ்.எஸ்.சரவணன் எம்.எல்.ஏ. கூறினார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon