--- --:--:-- --

13 வயது சிறுமியை நரபலி கொடுத்த விவகாரத்தில் உறவினர் இருவர் கைது!

14

13 வயது சிறுமியை நரபலி கொடுத்தால் சொத்துக்கள் பெருகும் என்ற மந்திரவாதியின் பேச்சை கேட்டு மகளை நரபலி கொடுத்த தந்தை மற்றும் உறவினர் 2 பேரை கைது செய்த புதுக்கோட்டை மாவட்ட காவல்துறையினர்.

 

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை தாலுக, விராலிப்பட்டி அருகே உள்ள நொடியூர் கிராமத்தில் 18.05.2020 அன்று தண்ணீர் எடுப்பதற்காக சற்று தொலைவில் உள்ள ஊற்று குளத்திற்கு சென்றுள்ள 13 வயது சிறுமி வித்யா நீண்ட நேரமாகியும் காணாததால், சிறுமியின் தாய் இந்திரா தனது மகளைத் தேடி சென்ற போது பாப்பான் குளக்கரை அருகே உள்ள தைலமரக்காட்டில் கழுத்து நெறிக்கும் பட்டு, ஆடை களையப்பட்டு உயிருக்கு போராடிய நிலையில் இருந்த சிறுமியை தஞ்சாவூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கொண்டு சேர்த்தார்.

 

இத்தகவல் கிடைத்தவுடன் விரைந்து சென்ற காவல்துறையினர் தங்களது விசாரணையை துவக்கினர். பின்னர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி சிறுமி 19.05.2020 அன்று இறந்தார்.இச்சம்பவம் குறித்து கந்தர்வகோட்டை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து புலன்விசாரணை மேற்கொண்டனர். மேலும் இவ்வழக்கின் குற்றவாளிகளை கண்டுபிடிக்க புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின்பேரில் 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டது.

 

இவ்வழக்கின் தொடர் விசாரணையில் சிறுமியை நரபலி கொடுத்தால் சொத்துக்கள் பெருகும் என்ற மந்திரவாதியின் பேச்சை கேட்டு மகளை நரபலி கொடுத்த தந்தை பன்னீர் செல்வத்தை போலீசார் கைது செய்தனர், மேலும் இவருக்கு உடந்தையாக இருந்த உறவினர் குமார் தெம்மாவூர் கிராம் நிர்வாக அலுவலரிடம் சரணடைந்தார்.

 

மேற்படி கொலைக்கு பயன்படுத்திய இருசக்கர வாகனங்கள், சேலை, துண்டு மற்றும் செல்போன்கள் கைப்பற்றினர். மேலும் இவ்வழக்கின் குற்றவாளிகளை விரைந்து கண்டுபிடித்த தனிப்படையினரை புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் வெகுமதி வழங்கி பாராட்டினார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon