--- --:--:-- --

மானியமில்லாத சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு!

4

மானியம் இல்லாத சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 11 ரூபாய் 50 காசுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. இந்த விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வருகிறது. சர்வதேச சந்தை நிலவர அடிப்படையில் மாதந்தோறும் முதல் தேதியில் சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றி அமைத்து வருகின்றன.

 

கடந்த மாதத்தில் மானியம் இல்லாத சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை டெல்லி நிலவரப்படி 744 ரூபாயிலிருந்து 589 ரூபாய் 50 காசுகள் ஆக எண்ணெய் நிறுவனங்கள் குறைத்துள்ளன. இந்த நிலையில் இன்று சிலிண்டர் விலையை 11 ரூபாய் 50 காசுகள் உயர்த்தி அறிவித்துள்ளன. இதனால் சிலிண்டர் விலை 581 ரூபாய் 50 காசிலிருந்து 593 ரூபாயாக உயர்ந்துள்ளது.

 

இந்த விலை உயர்வு பிரதமர் அறிவித்த இலவச எரிவாயு சிலிண்டர் விநியோகத்திற்கும் மானிய விலை சிலிண்டர் உபயோகத்திற்கும் பொருந்தாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பொது முடக்கம் தளர்த்தப்பட்டு வர்த்தகம் தொடங்கியுள்ள நிலையில் சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon