--- --:--:-- --

ஜூன் மாத ஊரடங்கையாவது முறையாக பயன்படுத்தி கொள்ளுங்கள்! முதல்வர் பழனிசாமிக்கு ஸ்டாலின் வலியுறுத்தல்

3

ஜூன் மாத ஊரடங்கையாவது முறையாக பயன்படுத்தி கொரொனா நோயை கட்டுப்படுத்த முதலமைச்சர் முயற்சி செய்யவேண்டும் என்று திமுக தலைவர் மு க ஸ்டாலின் வலியுறுத்தியிருக்கிறார்.

 

நோய் தொற்றிலிருந்து மக்களைக் காப்பதாக கூறும் நிலையில் தமிழகத்தில் இதுவரை 22 ஆயிரத்து 333 பேருக்கு கொரொனா தொற்று ஏற்பட்டது எப்படி என்று கேள்வி எழுப்பியுள்ள அவர் கடந்த 29 ஆம் தேதி மாவட்ட ஆட்சியர்கள் உடனான காணொளி ஆலோசனையின் போது முதல்வரின் கூற்றுப்படி 1.76 லட்சம் ஆய்வு உபகரணங்கள் தான் கையிருப்பு என்றால் மீதமுள்ள 2 லட்சத்து 71 ஆயிரத்து 450 உபகரணங்கள் எங்கே என்றும் மாவட்ட வாரியாக பரிசோதனை சோதனை கருவிகள் குறித்த விவரங்களை ஏன் வெளியிடவில்லை என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

 

இதுவரை அறிவிக்கப்பட்ட ஊரடங்கு காலத்தைப்போல வீணடிக்காமபல் ஜூன் மாதம் ஊரடங்கை முறையாக பயன்படுத்தி கட்டுப்படுத்தி மக்களை காப்பாற்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தீவிரமாக முயற்சி செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்வதாக மு க ஸ்டாலின் கூறியுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon