அனைத்து நீதிமன்றங்களையும் திறக்க பார்கவுன்சில் வலியுறுத்தல்!
அனைத்து நீதிமன்றங்களையும் திறந்து வழக்கறிஞர்களை அனுமதிக்க வேண்டுமென தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் அறிவுறுத்தியுள்ளது.
சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை மற்றும் 9 மாவட்டங்களில் உள்ள நீதிமன்றங்களில் வழக்குகளை விசாரிக்க அனுமதிக்கப்பட்டிருக்கும் நிலையில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள பெரும்பாலான வழக்கறிஞர் சங்கங்களுடன் காணொளி மூலமாக ஆலோசனை கூட்டத்தை பார் கவுன்சில் நடத்தியது.
அந்த கூட்டத்தில் சென்னை உயர்நீதி மன்ற வழக்கறிஞர் சங்கம், மெட்ராஸ் பார் அசோசியேஷன், சென்னையில் உள்ள சங்கங்கள், தமிழகம் முழுவதும் உள்ள சங்கங்களின் பிரதிநிதிகள் நேரடியாகவும், காணொளி மூலமாகமாகவும் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் காணொலிக் காட்சி மூலமாக விசாரணையின் பாதகங்கள் குறித்தும் அனைத்து நீதிமன்றங்களிலும் திறக்க அனுமதி வேண்டுமெனவும் தலைமை நீதிபதியும் சென்னை உயர்நீதி மன்ற நிர்வாகிகளையும் சந்தித்து மனு கொடுக்க இருப்பதாக முடிவெடுக்கப்பட்டுள்ளது.






