நவ.30ஆம் தேதிக்குள் வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்யலாம்..!
வருமான வரி விலக்கு பெறுவதற்கான முதலீடுகள் செலவுகளை இந்த மாதம் 30 ஆம் தேதிவரை மேற்கொள்ளலாம் என்று மத்திய நேரடி வரிகள் வாரியம் தெரிவித்துள்ளது.
கொரொனா பாதிப்பு காரணமாக தொடரும் பொது முடக்கத்தால் ஜூலை 31-ம் தேதி வரை இருந்த வருமான வரி தாக்க லுக்கான காலக்கெடுநவம்பர் 30-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக ஒரு நிதியாண்டுக்கான வரி விலக்குகளை பெற செலவுகள் மற்றும் முதலீடுகள் மார்ச் 31-ஆம் தேதி வரை மட்டுமே அனுமதிக்கப்படும் என்ற நிலையில் இந்த முறை அது ஜூன் 30ஆம் தேதி ஆக நீட்டிக்கப்படுவதாக மத்திய நேரடி வரிகள் வாரியம் தெரிவித்துள்ளது.
மார்ச் மாத இறுதிக்குள் முதலீடுகள், கட்டணங்களை நிறைவு செய்ய இயலாதவர்கள் இந்த மாத இறுதிக்குள் அவற்றை செய்து வரி விலக்கு பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.






