அமண்டா புயலில் சிக்கி ஒரு சிறுவன் உட்பட 7 பேர் உயிரிழப்பு!
எல் சால்வடாரில் அமண்டா புயல் காரணமாக 7 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். அடுத்த சில நாட்களுக்குள் மத்திய அமெரிக்கா மற்றும் தெற்கு மெக்சிகோவின் சில பகுதிகளில் அமண்டா புயல் காரணமாக கன மழை கொட்டி தீர்க்கும் என்றும் மணிக்கு 65 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும் அமெரிக்க தேசிய சூறாவளி மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் மத்திய அமெரிக்க நாடுகளில் ஒன்றான எல் சால்வடாரில் பலத்த மழை கொட்டி தீர்த்ததால் ஆறுகளிலும் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. கட்டடங்கள் இடிந்து விழுந்தன. இதில் 8 வயது சிறுவன் உட்பட 7 பேர் உயிரிழந்தனர்.பலர் படுகாயமடைந்தனர்.






