--- --:--:-- --

காட்மேன் வெப் சீரிஸ் சர்ச்சையான சம்பவத்தில் 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு!

8.1

காட்மேன் எனும் இணையதள தொடரின் ட்ரெய்லர் காட்சிகளில் குறிப்பிட்ட சமூகத்தை அவதூறாக பேசி இருப்பதாக சர்ச்சை எழுந்த நிலையில் அதன் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

நடிகர்கள் ஜெயபிரகாஷ், டேனியல் பாலாஜி உள்ளிட்டோர் நடித்து ஜூன் 12-ஆம் தேதி வெளியாக உள்ள இணையதள தொடரின் டீசர் அண்மையில் வெளியானது. அதில் இடம்பெற்றுள்ள காட்சிகளும் வசனங்களும் தங்கள் சமூகத்தைக் கொச்சைப்படுத்தும் வகையில் அமைந்திருப்பதாக பிராமண அமைப்புகள் புகார் அளித்தனர்.

 

இந்த நிலையில் தொடரின் இயக்குநர் பாபு யோகேஸ்வரன் தயாரிப்பாளர் இளங்கோவன் ஆகியோர் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவில் சைபர் கிரைம் போலீசார் 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இருவரும் வரும் மூன்றாம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது காட்மேன் .

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon