மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் செமஸ்டர் தேர்வுகள் ஜூலை 1ஆம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கொரொனா பரவலை தடுக்கும் விதமாக பல்கலைக் கழக தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டு இருக்கும் நிலையில், தேர்வு நடத்துவது தொடர்பாக காணொலி காட்சி மூலம் 12 துணை வேந்தர்கள் உடன் ஆலோசனை நடத்தப்பட்டது.
அதில் எடுக்கப்பட்ட முடிவின்படி மாணவர்களின் எதிர்காலம் கருதி வரும் ஜூலை முதல் தேதியில் செமஸ்டர் தேர்வுகள் தொடங்கி மாத இறுதிக்குள் தேர்வு முடிவுகளை வெளியிட முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் கிருஷ்ணன் கூறியுள்ளார். தமிழக உயர்கல்வித்துறை செயலாளரிடம் ஒப்புதல் பெற்ற பிறகு தேர்வு தேதிகள் அறிவிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.