தமிழகத்தில் இன்று சுட்டெரித்த வெயில்!
தமிழகத்தில் அதிகபட்சமாக திருத்தணியில் 110.8 டிகிரி ஃபாரன்ஹீட் அளவுக்கு வெயில் சுட்டெரித்தது. இந்த ஆண்டின் பதிவான அதிகபட்ச வெப்பநிலை இதுதான் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வேலூரில் 108.4 டிகிரி ஃபாரன்ஹீட் வெயிலின் தாக்கம் பதிவாகியுள்ளது.
சென்னை மீனம்பாக்கத்தில் 106.1 டிகிரி ஃபாரன்கீட், நுங்கம்பாக்கத்தில் 103.2 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் சுட்டெரித்தது. கரூர் பரமத்தியில் 104.3 டிகிரி ஃபாரன்ஹீட், சேலத்தில் 103.6 டிகிரி ஃபாரன்ஹீட் அளவுக்கு வெயில் கொளுத்தியது.
மதுரையில் 102.9 டிகிரி ஃபாரன்ஹீட், 102.5 டிகிரி ஃபாரன்ஹீட், புதுச்சேரி, நாகை ஆகிய இடங்களில் நோக்கி 102.2 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் தகித்தது தர்மபுரியில் 101.4 டிகிரி ஃபாரன்ஹீட், பரங்கிப்பேட்டையில் 101.3 டிகிரி ஃபாரன்ஹீட் , நாமக்கலில் 101 என்ற அளவுக்கு வெயிலின் தாக்கம் இருந்தது.
அம்பன் புயல் காற்றில் உள்ள ஈரப்பதத்தை ஈர்த்து சென்றதால் தமிழகம் முழுவதுமே வெப்பநிலை அதிகரித்து காணப்படுகிறது. அடுத்த இரண்டு நாட்களுக்கு இந்த நிலை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.






