சென்னை மாநகராட்சி நிர்வாகம் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு ஆன்ட்ராய்டு மொபைல் போன்களை இலவசமாக வழங்கியுள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக பல்வேறு பள்ளி, கல்லூரிகள் ஆன்லைன் பள்ளியில் மாணவர்களுக்கு பாடங்களை நடத்தி வருகின்றனர். இதற்கு ஒருபடி மேலாக சென்னை மாநகராட்சி நிர்வாகம் பள்ளி மாணவர்களை வழங்கியுள்ளது.
ஒன்பதாம் வகுப்பு முடிந்து பத்தாம் வகுப்பிற்கு செல்ல உள்ள 5 ஆயிரம் மாணவர்களுக்கு தன்னார்வத் தொண்டு நிறுவனத்தின் உதவியுடன் ஆண்ட்ராய்டு செல்போன்கள் வழங்கியுள்ளது. அதேபோல் பதினொன்றாம் வகுப்பு முடித்து பன்னிரெண்டாம் வகுப்பிற்கு செல்லும் மாணவர்களுக்கும் அடுத்த வாரம் ஆண்ட்ராய்டு போன்கள் வழங்கப்பட உள்ளது.
நேரில் அழைத்து ஆண்ட்ராய்டு போன்களை வழங்கியதும் மாணவர்களும், மாணவிகளும் மகிழ்ச்சியுடன் திகைத்தனர். பள்ளி திறப்பு வரை மாணவர்களுக்கு ஜும் செயலி வழியாக கணிதம், அறிவியல், சமூக அறிவியல் ஆகிய பாடங்களை நடத்த உள்ளதாகவும் இது வரவேற்கத்தக்க முயற்சி எனவும் ஆசிரியர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
ஆன்லைன் கல்வித் திட்டங்களுக்கு ஆதரவு, எதிர்ப்பு என இருவேறு கருத்துகள் இருந்தாலும் தற்போதைய நவீன காலகட்டத்தில் கல்வி என்பது தவிர்க்க முடியாததாகவே உள்ளது. அதே நேரத்தில் மொபைல் போன்களை மாணவர்கள் நல்ல வழியில் பயன்படுத்த வேண்டும் என்ற கருத்து வலியுறுத்தப்படுகிறது.