தமிழ்நாட்டில் சில இடங்களில் 100 டிகிரியை தாண்டிய வெப்பநிலை!
தமிழகத்தில் இன்று பல்வேறு இடங்களில் வெப்பநிலை 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி பதிவாகியுள்ளது. கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்லும் நிலையில் அதிகமாக திருத்தணியில் 109 டிகிரி ஃபாரன்ஹீட் பதிவானது.
சென்னை மற்றும் காஞ்சிபுரத்தில் தலா 106 டிகிரியும் ஈரோடு, திண்டுக்கல், மதுரை, பெரம்பலூர் மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் வெப்பநிலை 100 டிகிரிக்கு மேல் வெப்பம் பதிவாகியுள்ளது.






