--- --:--:-- --

இன்று கரையைக் கடக்கும் அதி தீவிர அம்பன் புயல்!

9

வங்கக் கடலில் உருவான அம்பன் புயல் நேற்று முன்தினம் சூப்பர் புயலாக உருவெடுத்தது. அதன் பின்னர் தீவிர புயலாக வலு குறைந்து இன்று மாலை மேற்கு வங்கத்தின் திகா மற்றும் வங்கதேசத்தின் தீவுகளுக்கு இடையே கரையை கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

 

இந்த நிலையில் அம்பன் புயல் கடந்த ஆறு மணி நேரத்தில் 19 கிலோ மீட்டர் வேகத்தில் வடக்கு நோக்கி நகர்ந்து ஒடிசாவில் 210 கிலோமீட்டர் தொலைவில் நிலை கொண்டு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அம்பன் கரையை கடக்கும்போது மணிக்கு 180 கிலோமீட்டர் வேகத்தில் சூறாவளி வீசும் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் ஒடிசா மற்றும் மேற்கு வங்கத்தில் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

 

இந்த நிலையில் புயல் காரணமாக இன்று ஒடிசா, மேற்கு வங்க மாநில கடலோர பகுதிகளில் சூறாவளி காற்றுடன் கன மழை பெய்து வருகிறது. புயல் பாதிப்புள்ள ஒடிசா கரையோரப் பகுதிகளில் மக்களை வெளியேற்றும் நடவடிக்கைகளில் தேசிய பேரிடர் மேலாண்மை படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

 

அந்தமான் நிக்கோபர் தீவுகள் முதல் வங்கதேசம் வரையிலும் கடலுக்குள் மீனவர்கள் கடற்படை கப்பல்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. 1999 ஆம் ஆண்டுக்குப் பின்னர் வரும் தீவிர புயல் என்பதால் வீடுகள் மற்றும் மரங்களுக்கு பெரும் சேதம் உண்டாகும் என எதிர்பார்க்கப்படுவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

அம்பன் புயல் தாக்குதல் தீவிரமாக இருக்கும் என்பதால் மேற்கு வங்கத்தின் கடலோரப் பகுதிகளில் 3 லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர். அவர்களை பள்ளிகளிலும் திருமண மண்டபங்களில் தங்க வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன.

இதற்கிடையில் மேற்குவங்க முதலமைச்சர் மம்தா ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக் ஆகியோரை தொடர்பு கொண்டு உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசினார். அப்போது அம்பன் புயலில் இருந்து நிலைமையை சமாளிக்க அனைத்து உதவிகளையும் செய்வதாக அவர்களுக்கு உறுதி அளித்தார். ஒடிசாவில் 60,000 பேர் முதல் ஒரு லட்சம் பேர் வரை வெளியேற்றப்படுவார்கள் என அந்த மாநில நிவாரண ஆணையர் பிரதீப்குமார் தெரிவித்திருக்கிறார்.

 

இத்தனை நாட்களாக வீட்டிற்குள் இருக்க சொன்ன மக்களை இப்போது வெளியேற்றுவது மிகவும் சிக்கலான பிரச்சனை என்றும் அவர் தெரிவித்துள்ளார். தற்போது கொரொனா எனும் பேரழிவை எதிர் கொண்டிருப்பதாகவும் அடுத்து அம்பன் என்ற மற்றொரு பேரழிவை எதிர்கொள்ள தயாராக இருப்பதாகவும் தேசிய பேரிடர் மீட்புப் படையின் தலைவர் என்று தெரிவித்திருக்கிறார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon