--- --:--:-- --

அரசு உத்தரவை மீறி மாணவர்களுக்கு தேர்வு நடத்தும் தனியார் பள்ளிகளுக்கு எச்சரிக்கை!

1

ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி என்ற அரசின் அறிவிப்பை மீறி தேர்வுகள் குறித்து குறுஞ்செய்தி அனுப்பும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தனியார் பள்ளிகள் இயக்ககம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

 

இதுதொடர்பாக, முதன்மை கல்வி அலுவலர்களுக்கு விடுத்துள்ள சுற்றறிக்கையில் கொரொனா வைரஸ் பரவலை தடுக்க அனைத்து பள்ளிகளிலும் ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் தேர்ச்சி என்று அரசு அறிவித்திருப்பது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

 

இந்த நிலையில் பள்ளிகள் மீண்டும் திறந்ததும் மீண்டும் தேர்வு நடத்தப்பட்டு, அதன் அடிப்படையில் தேர்ச்சி வழங்கப்படும் என்று சில பள்ளிகள் பெற்றோருக்கு குறுஞ்செய்தி அனுப்பி வருவதாக சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

அரசு உத்தரவை மீறி இவ்வாறு குறுஞ்செய்தி அனுப்பும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தனியார் பள்ளிகள் இயக்ககம் எச்சரித்துள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon