பணிக்கு துபாய் சென்ற இளைஞருக்கு மஞ்சள் காமாலை பாதிப்பு! ஒரே மாதத்தில் 20 கிலோ குறைந்த இளைஞர்!
துபாய்க்கு வேலை தேடி சென்ற இடத்தில் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு உடல் நிலை மோசமடைந்த இளைஞர் உதவி கோரி வெளியிட்ட விடியோ சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
போடியை சேர்ந்த 27 வயது இளைஞர் கணேஷ்குமார் ஒரே மாதத்தில் 20 கிலோவுக்கு மேல் உடல் எடை குறைந்த போதும் பெற்றோருக்கு தெரிந்தால் கவலைப்படுவார்கள் என்பதற்காக சொல்லாமல் மறைத்துள்ளார்.
ஆனால் தற்போது உடல்நிலை மோசமாகி கேன்சருக்கான அறிகுறிகள் தென்படுவதாக மருத்துவர்கள் தெரிவித்ததால் உதவி கோரி கண்ணீர் மல்க வீடியோ வெளியிட்டுள்ளார். வீடியோவில் மகன் இருக்கும் நிலையை பார்த்து பதறிப்போன பெற்றோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்த நிலையில் உரிய நடவடிக்கை எடுப்பதாக ஆட்சியர் உறுதியளித்துள்ளார்.






