சிறப்பு ரயில்களில் செல்ல விதிமுறைகள் என்னென்ன?

சிறப்பு ரயில்களில் பயணச்சீட்டு முன்பதிவு செய்ய சேர்விடம் முகவரியை குறிப்பிடுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. டெல்லிக்கும் பல்வேறு மாநிலங்களுக்கும் இடையே மொத்தம் 30 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

 

இவற்றில் பயணம் செய்ய ஒரு வாரம் முன்கூட்டியே ஐஆர்சிடிசி இணையதளத்தில் முன்பதிவு செய்யலாம். அதே நேரத்தில் இந்த பயணச்சீட்டு முன்பதிவு செய்ய சேர்விட முகவரியை குறிப்பிடுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பயணிகள் கொரொனாவால் பாதிக்கப்பட்டு இருந்தால் அவர்களின் தொடர்புகளை கண்டறிய அரசுக்கு இது உதவியாக இருக்கும்.

 

இந்த சிறப்பு ரயில்களுக்கான பயணச்சீட்டுகளை ஐஆர்சிடிசி இணையதளத்தில் ரத்து செய்வதற்கு ரயில் புறப்படுவதற்கு 24 மணி நேரம் முன்பு வரை அனுமதிக்கப்படுகிறது. பயண கட்டணத்தில் பாதி தொகை ரத்து கட்டணமாக பிடித்துக் கொள்ளப்படும்.


Leave a Reply