--- --:--:-- --

பிரதமர் மோடி அறிவித்த 4வது கட்ட ஊரடங்கு எப்படி இருக்கும்?

4.1

வரும் 18ஆம் தேதி தொடங்கும் ஊரடங்கின் நான்காம் கட்டம் முற்றிலும் வேறுபட்ட வடிவில் இருக்கும் என பிரதமர் நரேந்திர மோடி கூறியிருந்தார். மாநிலங்களைப் பொறுத்தவரை கொரொனா பாதிப்பில் முதலிடத்தில் உள்ள மகாராஷ்டிரா ஊரடங்கை நீட்டிக்க திட்டமிட்டுள்ளது. மாவட்டங்களுக்கு இடையேயான போக்குவரத்தையும் அலுவலகங்கள் திறப்பு அனுமதிக்க அம்மாநிலம் தயாராக இல்லை.

 

எனவே மகாராஷ்டிராவில் ஆரஞ்சு, பச்சை மண்டலங்களில் மட்டும் சில தொழிற்சாலைகள் அனுமதிக்கப்படலாம். இரண்டாவது இடத்திலுள்ள குஜராத்தை பொருத்தவரை முக்கிய நகரங்களில் தொழில் மையங்களில் பொருளாதார செயல்பாடுகளை தொடங்க அம்மாநில அரசு விரும்புகிறது. அங்கு கொரொனா பாதித்தோரில் 70% பேர் அகமதாபாத், சூரத், வதோதராவில் உள்ளனர்.

 

எனவே கொரொனா பாதிப்பில்லாத மாவட்டங்களில் சில தளர்வுகள் அளிக்கப்படலாம். குஜராத் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் பல்வேறு துறைகளில் அனுமதிக்க வேண்டும் என பரிந்துரைத்துள்ளனர். இதில் கேரளா மெட்ரோ,உள்ளூர் ரயில்கள் சுற்றுலா துறையை புதிப்பிக்க விரும்புகிறது. அதேசமயம் புலம்பெயர் தொழிலாளர்கள் ஊர் திரும்புவதால் பீகார், ஜார்கண்ட், ஒடிசா ஆகிய மாநிலங்கள் கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு நீட்டிக்க விரும்புகின்றன.

 

சிவப்பு மண்டலம் எவ்வித செயல்பாடுகளும் அனுமதிக்கப்படமாட்டாது என்றாலும் பிற பகுதிகளில் ஊரடங்கு தளர்த்தப் படவேண்டும் என்பது மாநிலங்களின் விருப்பமாகும். இந்த நிலையில் ஊரடங்கு நான்காம் கட்டத்தில் பாதிப்பில்லாத பகுதிகளில் இயல்பு நிலை திரும்ப செய்வதற்கான நடவடிக்கைகளில் அரசு கவனம் செலுத்தும் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 

ஊரடங்கு தளர்வு மற்றும் கட்டுப்பாடுகள் தொடர்பாக மாநில அரசுகள் வழங்கும் திட்டம் அது கள நிலாவரத்தோடு எந்த அளவிற்கு ஒத்துப் போகிறது என்பதை தரவுகளின் அடிப்படையில் மத்திய உள்துறை அமைச்சகத்தால் இந்த நடவடிக்கைகள் முடிவு செய்யப்படும். அந்த வகையில் மாநில வாரியாக எவ்வளவு பேருக்குக் கொரொனா உறுதியாகியுள்ளது, எவ்வளவு பேர் தனிமை நிலையில் கண்காணிப்பில் இருக்கிறார்கள் என்ற விபரங்கள் உள்துறை அமைச்சகம் கவனம் செலுத்துகிறது.

சுமார் 12 லட்சம் பேர் கண்காணிப்பில் இருக்கும் நிலையில் இதில் ஒரு பகுதியினருக்கு பாசிட்டிவ் என்று வந்தாலே பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து விடும் என்பதால் அதற்கு ஏற்ப நடவடிக்கைகள் இருக்கும் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மிக முக்கியமாக மாநிலங்களின் கோரிக்கையாக சிவப்பு மண்டலங்களை வரையறுக்கும் அதிகாரம் மாநிலங்களுக்கு வழங்கப்படலாம்.

 

ஊரடங்கு தளர்த்தப்படும் பகுதிகளில் பேருந்து மற்றும் உள்நாட்டு விமான சேவைகளுக்கு அனுமதி அளிக்கப்படும். கொரொனா பாதிப்பில்லாத பகுதிகளில் உள்ளூர் பேருந்துகள் குறைவான பயணிகளுடன் இயங்க தொடங்கும். கட்டுப்பாட்டு பகுதிகள் தவிர்த்து பிற பகுதிகளில் நிபந்தனைகளுடன் ஆட்டோ, டாக்சிகள் இயங்க அனுமதிக்கப் படலாம்.

 

அனுமதி பாஸ் பெற்றவர்கள் மற்றும் மாநிலங்களுக்கிடையே சென்று வரை அனுமதிக்கப்படலாம். அத்தியாவசிய பொருட்கள் மட்டுமின்றி அனைத்து வகையான பொருட்களையும் ஹோம் டெலிவரி செய்ய அனுமதிக்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon