பொருளாதார சவால்களை வெற்றிக்கான வாய்ப்பாக மாற்றுவோம்

பிரதமர் மோடி அறிவித்த 20 லட்சம் கோடி கொரொனா பொருளாதார நிவாரணத் திட்டம் குறித்த விளக்கத்தை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று மாலை டெல்லி செய்தியாளர் சந்திப்பில் வெளியிட்டு வருகிறார். சிறு, குறு நடுத்தர தொழில் துறை, முத்ரா உள்ளிட்ட வங்கி கடன்கள், சிறு, குறு தொழில்களுக்கான புதிய முதலீடுகள் உள்ளிட்ட பல பிரிவுகளில் இந்த நிவாரணத் திட்டம் செயல்படுத்தப்படும்.
 

இந்நிலையில் பிரதமரின் அறிவிப்பு பற்றி டுவிட்டரில் பதிவு செய்திருக்கும் நிர்மலா சீதாராமன் கொரொனா ஏற்படுத்திய பொருளாதார சவால்களை வெற்றி பெறுவதற்கான ஒரு வாய்ப்பாக மாற்றுவோம் என கூறியுள்ளார். அண்மைகாலமாக இந்திய பொருளாதாரம் வலுவடைந்து வருவதாகவும் உலக நாடுகளுடன் தன்னம்பிக்கையுடன் ஈடுகொடுக்கும் அளவுக்கு உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

 

மோடி அறிவித்துள்ள ஆக்மன் நிர்மன் பாரத் திட்டம் இந்தியாவை உலக நாடுகளுடன் ஒன்றிணைக்குமே தவிர தனிமைப்படுத்தாது என்றும் அவர் திட்டவட்டமாக தெரிவித்திருக்கிறார்.


Leave a Reply