வியாபாரியிடம் அத்துமீறிய சம்பவம் – மன்னிப்பு கேட்ட நகராட்சி ஆணையர்

வாணியம்பாடியில் பழக்கடை வியாபாரியின் தள்ளு வண்டியை கவிழ்த்து பழங்களை கீழே கொட்டிய சம்பவத்திற்கு நகராட்சி ஆணையர் சிசில் தாமஸ் மன்னிப்பு கேட்டுள்ளார். அத்துடன் பெண் வியாபாரியை நேரில் சந்தித்து வருத்தம் தெரிவித்தார்.

 

அரசு அதிகாரிகள் அவருக்கு சால்வை அணிவித்து மரியாதை செய்வதோடு நிவாரணம் வழங் கினார்கள். பின்னர் பேசிய வியாபாரி பூங்கொடி அதிகாரிகளின் எச்சரிக்கையை பொருட்படுத்தாமல் கடை வைத்தால் இந்த சம்பவம் நடந்ததாக வருந்தினார்.

 

இதற்காக ஆணையரிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்வதாக கூறிய அந்த வியாபாரி அதிகாரிகளின் அறிவுறுத்தலுக்கு ஒப்புதல் அளிப்போம் என உறுதியளித்தார். இதனிடையே ஊடகங்களில் வெளியான செய்தியின் அடிப்படையில் வாணியம்பாடி நகராட்சி ஆணையர் மீது மாநில மனித உரிமைகள் ஆணையம் வழக்கு பதிவு செய்துள்ளது.


Leave a Reply