கொரொனாவிலிருந்து குணமடைந்த 113 வயது மூதாட்டி!
ஸ்பெயின் நாட்டில் 113 வயதான மூதாட்டி ஒருவர் கொரொனா நோயிலிருந்து மீண்டுள்ளார். அந்த மூதாட்டியின் பெயர் மரியா பிரன்யா சாகு. ஸ்பெயின் கிழக்குப் பகுதி நகரான ஒளாட்டில் உள்ள முதியோர் காப்பகத்தில் 20 ஆண்டுகளாக அவர் தங்கியுள்ளார் .
ஏப்ரல் மாதம் கொரொனா நோய் பாதித்து இருப்பது உறுதியானால் தனியறையில் பல வாரங்களாக தனிமைப் படுத்தப் பட்டிருந்தார். ஏற்கனவே அந்த காப்பகத்தின் பலர் உயிரிழந்த நிலையில் தற்போது உயிர் பிழைத்திருக்கும் மூதாட்டியை ஸ்பெயினிலிருந்து கொரொனாவிலிருந்து குணமான அதிக வயதுடைய நபராக கருதப்படுகிறார்.






