தன்னைப் படம் பிடித்தவரை தாக்கிய மலைப்பாம்பு!
ஆஸ்திரேலியாவில் உணவருந்த வந்த பறவையை மலைப்பாம்பு ஒன்று உயிருடன் பிடித்து முழுமையாக விழுங்கிய வீடியோ வெளியாகியுள்ளது. குயின்ஸ்லாந்து மாகாணத்தில் வனப்பகுதியை ஒட்டி கட்டப்பட்டிருந்த வீட்டின் உரிமையாளர் அந்த பகுதியில் உள்ள பறவைகளுக்காக பிரத்யேக உணவு உண்ணும் இடம் அமைத்து இருந்தார்.
அப்போது பறவைகள் உணவருந்திக் கொண்டிருந்த போது அங்கு வந்த மலைப்பாம்பு ஒன்று பறவையை பிடித்து இறுக்கிக் கொண்டது. பின்னர் சாவகாசமாக அந்த பறவையை முழுமையாக விழுங்கியது. தகவலறிந்த பாம்பு பிடிப்பவர் ஒருவர் மலைப்பாம்பை தரையில் படுக்க வைத்து இருந்தார். அப்போது படம் எடுத்தவரை நோக்கி அந்த பாம்பு மின்னல் வேகத்தில் தாக்கியதில் அவர் நூலிழையில் உயிர் தப்பினார்.






