--- --:--:-- --

தஞ்சாவூர் நெட்டி மாலைக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது!

9.1

உலகப் புகழ்பெற்ற தஞ்சாவூர் ரெட்டிமாலை மற்றும் அரும்பாவூர் மர வேலைப்பாடுகளுக்கு உரிய அங்கீகாரம் அளிக்கும் விதமாக புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. குறிப்பிட்ட ஒரு இடத்தில் தயாரிக்கக்கூடிய பொருட்கள் மற்றும் அதன் பெருமையை விளக்கும் விதமாக அந்த பொருட்களுக்கு புவிசார் குறியீடு வழங்கப்படுகிறது.

 

அதன் தொடர்ச்சியாக தற்போது ஆயிரம் ஆண்டு பழமை வாய்ந்த தஞ்சையில் செய்யப்படும் உலகப் புகழ்பெற்ற நெட்டிமாலை மற்றும் வேலைப்பாடுகளுக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. தஞ்சாவூர் நெட்டி என்பது குளம், ஏரி ஆகியவற்றில் டிசம்பர் முதல் பிப்ரவரி வரை கிடைக்கும் ஒரு வகை தாவரம் ஆகும்.

 

இந்த நெட்டியை பறித்து வெயிலில் உலர்த்தி பதப்படுத்தி கோவில் அமைப்புகள், சாமி உருவங்கள், இயற்கை காட்சிகள், கட்டிட அமைப்புகள் செய்யப்படுகின்றன. பார்ப்பதற்கு தங்கத்தில் செய்யப்பட்டது போன்று காட்சியளிக்கும் இந்த வேலைபாடுகள் உலகப் புகழ் பெற்றவை. அத்தோடு மாட்டுப் பொங்கலின் போது மாடுகளுக்குப் பயன்படும் மாலை செய்வதற்கும் இந்த நெட்டி பயன்படுத்தப்படுகிறது.

 

இவ்வாறு தமிழர்களின் வாழ்வியலோடு ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக பிணைக்கப்பட்டுள்ள நெட்டிமாலைக்கு தற்போது புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. இதேபோல் பெரம்பலூர் மாவட்டம் அரும்பாவூரில் செய்யப்படும் மர வேலைப்பாடுகளுக்கும் மத்திய அரசு புவிசார் குறியீடு வழங்கியுள்ளது.
புவிசார் குறியீடு கிடைத்துள்ளதால் தங்களது வாழ்வாதாரம் மேம்பட வாய்ப்புள்ளதாக கூறுகின்றனர் இதன் தயாரிப்பாளர்கள்.

 

தஞ்சை நெட்டி வேலைப்பாடுகள் மற்றும் அரும்பாவூர் வேலைப்பாடுகளுக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ள நிலையில் இதுவரை தமிழகத்தில் பாரம்பரிய சிறப்பு மிக்க கைவினைப்பொருட்கள் ஆன தஞ்சை கலைத்தட்டு, நாச்சியார்கோவில் குத்துவிளக்கு, காஞ்சிபுரம் பட்டு உள்ளிட்ட 35 பொருட்களுக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon