ரூ.500 விலையில் கொரோனா பரிசோதனை செய்யும் கருவி!

Publish by: செய்திப்பிரிவு --- Photo :


கொரொனா சோதனைக்கு வெறும் 500 ரூபாய் மட்டுமே செலவாகும் கொரொனா சோதனை கருவியை மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்த ஜிசிசி பயோடெக் என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது.

 

இரண்டு மாத ஆய்வுகளில் கண்டுபிடிக்கப்பட்ட மலிவு விலை கொரொனா பரிசோதனை கருவிக்கு இந்திய மருத்துவ கவுன்சில் கடந்த ஒன்றாம் தேதி ஒப்புதல் அளித்ததாக பயோடெக் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஆர் மஜூம்தார் தெரிவித்துள்ளார்.

 

மொத்தம் ஒரு கோடி சோதனை கருவிகள் உருவாக்கப்பட்டுள்ள தாகவும் இதில் 40 லட்சம் கிட்கள் கையிருப்பில் தயாராக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் அரசு மருத்துவமனைகளில் கொரொனா பரிசோதனை இலவசமாக செய்யப்பட்டாலும் தனியார் மருத்துவமனைகளில் நான்காயிரத்து 500 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

 

சீனா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கொரொனா பரிசோதனை கருவிகளை ஒப்பிடும்போது இது மிகவும் மலிவு விலை கருவி என்பது குறிப்பிடத்தக்கது.


Leave a Reply