லிவிங் டுகெதர் ரிலேசன்ஷிப்! கள்ளக்காதலியால் கொலை செய்யப்பட்ட இளைஞர்!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


வேலூர் இளைஞர் படு கொலையில் திடீர் திருப்பம் ஏற்பட்டிருக்கிறது. அந்த இளைஞரின் கள்ளக்காதலியே கூலிப்படையை ஏவி கொலை செய்தது அம்பலமாகியுள்ளது. குற்றவாளிகள் சிக்குவார்களா? 28 வயதான சுனில் தாஸ் தனது கள்ளக்காதலியால் கூலிப்படையால் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார். இரண்டு வருடங்களாக 28 வயது சுனிலும், 45 வயதான கோகிலாவும் லிவ்விங் டுகெதர் என்று வாழ்ந்த நிலையில் திடீரென சுனில் கொலை செய்யப்பட காரணம் என்ன?

 

வேலூர் மாவட்டம் ஓசூரை சேர்ந்த 28 வயதான சுனில் படிப்பை பாதியில் விட்டு விட்டு போக்கிரியாக வலம் வந்துள்ளார். எப்போதும் பந்தாவாக ஊர் சுற்றும் சுனில் வழிப்பறி திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு அடிக்கடி சிறை சென்று வந்துள்ளார். உள்ளூர் காவல் நிலையங்களில் கொலை முயற்சி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட வழக்குகள் அவருக்கு எதிராக நிலுவையில் உள்ளன.

 

பக்கத்து கிராமமான விருதம்பட்டு பகுதியில் கணவரை பிரிந்து வாழும் 40 வயது கோகிலா என்பவருக்கும் கோகிலாவுக்கும் நட்பு ஏற்பட்டது. அந்த நட்பு காலப்போக்கில் இருவருக்குமான நெருக்கமான உறவை ஏற்படுத்தியது. ஒருகட்டத்தில் இருவரும் விருதம்பட்டு சர்க்கார் தோப்பு அருகே வாடகைக்கு வீடு எடுத்து கணவன் மனைவியாக வாழ்ந்து வந்தனர்.

 

இரண்டு ஆண்டுகளாக திருட்டு தொழிலில் கிடைத்த பணத்தை சுனில் கோகிலாவிடம் கொடுத்து வந்துள்ளார். ஆனால் கஞ்சா மற்றும் மதுவிற்கு அடிமை ஆனதால் தினமும் கோகிலாவை அடித்து துன்புறுத்தியதாக தெரிகிறது. சுனிலின் கொடுமை தாங்க முடியாத கோகிலா பிரிந்து செல்ல முயற்சித்த போது அவரை தடுத்து சமாதானம் செய்துள்ளார்.

கொடுமை உச்சக்கட்டத்தை அடைந்தால் தாங்கமுடியாத கோகிலா எப்படியாவது சுனிலை தீர்த்து கட்ட முடிவு செய்தார். கூலிப்படைக்கு பணம் கொடுத்து ஏற்பாடு செய்துவிட்டு எதுவும் தெரியாதது போல் வீட்டில் இருந்துள்ளார் கோகிலா. கடந்த சனிக்கிழமை இரவு வழக்கம்போல் போதையில் வந்த சுனில் வீட்டில் தூங்கியுள்ளார்.

 

அப்போது கோகிலா கூலி படையினருக்கு தகவல் கொடுத்தார். இதையடுத்து வீட்டிற்கு வந்த கூலிப்படை கும்பல் தூங்கிக் கொண்டிருந்த சூழ்நிலையில் அரிவாளால் சரமாரியாக வெட்டி சாய்த்தது. இதில் ரத்த வெள்ளத்தில் சுனில் அங்கேயே உயிரிழந்தார்.மேலும் சுனிலின் உடலை எடுத்து சென்று அருகில் உள்ள தோப்பில் வீசிவிட்டு கும்பல் தப்பி சென்றது.

 

கோகிலாவும் அங்கிருந்து தப்பியோடியுள்ளார். சடலம் கிடந்தது தொடர்பாக போலீசாருக்கு தகவல் கிடைத்ததும் சடலத்தை மீட்ட விருதம்பட்டு போலீசார் உடற்கூறு ஆய்வுக்காக வேலூர் அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர்.

 

வாகன சோதனையில் சிக்கிய கூலிப்படையை சேர்ந்த இருவரை பிடித்து போலீசார் அவர்களிடம் நடத்திய விசாரணையில் கொலையின் பின்னணி தெரிய வந்தது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக சுனிலின் கள்ளக்காதலி கோகிலா மற்றும் கூலிப்படையை சேர்ந்த இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.


Leave a Reply