பேட்டரியை விழுங்கிய 5 வயது சிறுவன்!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


சிறிய ரக பட்டன் பேட்டரியை விழுங்கியதால் உயிருக்கு போராடிய ஐந்து வயது சிறுவனை திருச்சி அரசு மருத்துவமனை மருத்துவர்கள் காப்பாற்றியுள்ளனர். பெரம்பலூர் மாவட்டம் தொளுதூர் வட்டம் வெள்ளி வாடியை சேர்ந்த சங்கர் , மணிமேகலை தம்பதியின் மகன் சந்தோஷ் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தபோது பட்டன் பேட்ரியை தவறுதலாக விழுங்கி விட்டான்.

 

முதலுதவி சிகிச்சைக்குப் பின் திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட சிறுவன் சந்தோஷின் உணவுக் குழாயில் சிக்கி இருந்த பாட்டரியை மருத்துவர்கள் எண்டோஸ்கோப்பி மூலம் 10 நிமிடத்தில் வெற்றிகரமாக அகற்றினர்.


Leave a Reply