திருவாடானையில் கொரனோ தடுப்பு முகாமில் தனிமை படுத்தியவர்களுக்கு போதிய உணவு, சுகாதாரம் இல்லை

Publish by: ஆனந்த் குமார் --- Photo :


ராமநாதபுரம் மாவட்டம்,திருவாடானை அரசு கல்லூரியில் கொரனோ நோய் தொற்றிலிருந்து, பாதுகாக்க வெளியூரில் இருந்து வரும் நபர்களை 14 நாட்கள் தனிமை படுத்துவதற்கான வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த வார்டில் சுமார் 50க்கும் மேற்பட்டோர் தனிமைப்படுத்தி கண்காணிக்கப்பட்டு வருகிறது.கடந்த 8-ம் தேதி அன்று சுமார் 15 பேர் அவரவர் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

 

இந்த சூழலில் அங்கு தொடர் கண்காணிப்பில் இருக்கும் சிலர் கூறுகையில், தங்களுக்கு உயிர் பயம் உள்ளதாகவும், குழந்தைகளுக்கு பால் கூட தர மறுக்கின்றனர். மேலும்,போதிய உணவு வழங்குவதில்லை.சுகாதாரம் கேள்வி குறியாக உள்ளது.

கடந்த 8-ம் தேதி இங்கிருந்து அனுப்பப்பட்ட இரு நபர்களுக்கு கொரனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களை இந்த வார்டில் தான் 12 நாட்கள் தனிமைப்படுத்தி வைத்திருந்தனர். அதன் காரணமாகவே இங்கு இருக்க எங்களுக்கு அச்சமாக உள்ளது.

 

இங்கு எங்களை மரியாதை குறைவாக நடத்துகிறார்கள். மாவட்ட ஆட்சியர் கருணை உள்ளத்தோடு, எங்களை காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர்.


Leave a Reply