தமிழகத்தில் 798 ,அதில் சென்னையில் மட்டும் 538 பேருக்கு கொரோனா தொற்று உறுதி !!!

Publish by: செய்திப்பிரிவு --- Photo :


தமிழகத்தில் கடந்த சில தினங்களாக கொரோனா வைரசின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.இதில் சென்னையில் கொரோனா வைரஸ் கோர தாண்டவமாடி வருகிறது.தமிழகத்தில் இன்று மட்டும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டோரில் சென்னையில் மட்டும் 538 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

 

அதனைத் தொடர்ந்து திருவள்ளூரில் 97 பேருக்கும்,செங்கல்பட்டில் 90 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அரியலூரில் 33 , திருவண்ணாமலையில் 10 ,காஞ்சிபுரத்தில் 8 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும், மதுரை,ராமநாதபுரத்தில் தலா நால்வருக்கும்,தஞ்சை மற்றும் தூத்துக்குடியில் தலா 3 பேருக்கும்,தர்மபுரியில் இருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், திண்டுக்கல், கன்னியாகுமரி,பெரம்பலூர்,ராணிப்பேட்டை,வேலூர்,விருதுநகரில் தலா ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

 

தமிழகத்தில் இன்று மட்டும் 798 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 8002 ஆக உயர்ந்துள்ளது.மேலும்,கொரோனா தொற்றால் இன்று ஒரே நாளில் 6 பேர் உயிரிழந்துள்ள நிலையில் பலியானோரின் எண்ணிக்கையும் 53 ஆக உயர்ந்துள்ளது.


Leave a Reply