இராமநாதபுரம் மாவட்ட மக்கள் பாதை இயக்கம் சார்பாக ஏழை எளிய குடும்பங்களுக்கு அத்தியாவசிய நிவாரண பொருட்கள் வழங்கல்

Publish by: மகேந்திரன் --- Photo :


இராமநாதபுரம் மாவட்ட மக்கள் பாதை சார்பாக இராஜசிங்கமங்கலம் ஒன்றியம் சோழந்தூரில் கொரோனா பேரிடர் நிவாரண பொருட்கள் இன்று வழங்கப்பட்டது. மக்கள்பாதை இயக்கத்தின் பேரில் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.

 

ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் சோழந்தூரில் உள்ள ஆதரவற்றோர், மாற்றுத்திறனாளிகள், ஏழைகளுக்கு என 15 குடும்பங்களுக்கு தேவையான அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டது. தனி மனித இடைவெளியை பின்பற்றி நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.

நிவாரண பொருட்களுக்கு இராஜசிங்கமங்கலத்தைச் சேர்ந்த அல்நூர் சங்கம் துபாய் நிர்வாகிகள் உதவினர்.
இந்நிகழ்வில் மக்கள் பாதை இராஜசிங்கமங்கலம் ஒன்றிய பொறுப்பாளர் ஆசிரியர் பாதுஷா, சமூக ஆர்வலர் முஹம்மது முபஸ்ஸிர் மற்றும் சோழந்தூர் பகுதியைச் சார்ந்த இளைஞர்கள் ரிஸ்வான், கௌதுல், ஜவாஹிர், ரில்வான் ஆகியோர் கலந்து கொண்டு நிவாரண பொருட்களை வழங்கினர்.


Leave a Reply