முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி!

Publish by: செய்திப்பிரிவு --- Photo :


முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று இரவு 8.45 மணியளவில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்ட மன்மோஹன் சிங் அங்கு உடனடியாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

 

87 வயதான மன்மோகன்சிங் ஏற்கனவே இரண்டு முறை இருதய மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டவர் என்பதால் மருத்துவர்கள் கூடுதலான கவனத்துடன் அவருடைய உடல் நலனை கண்காணித்து வருகின்றனர். அவருக்கு காய்ச்சல் இருந்ததாகவும் தற்போது நலமாக இருப்பதாகவும் மன்மோகன்சிங் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Leave a Reply