பிரபல பாலிவுட் நடிகை பூனம் பாண்டே கைது! காரணம் என்ன?

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


ஊரடங்கு கட்டுப்பாட்டை மீறியதாக பாலிவுட் நடிகை பூனம் பாண்டேவை மரீம் டிரைவ் காவல்நிலைய போலீசார் கைது செய்தனர். அவர் தனது ஆண் நண்பருடன் எந்தவித காரணமுமின்றி ஊருக்குள் சுற்றி திரிந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

 

பூனம் பாண்டே பயன்படுத்திய பிஎம்டபிள்யூ கார் ஒன்றையும் போலீசார் பறிமுதல் செய்தனர். சட்டத்தை மதிக்காதது, நோய்த்தொற்று பரவலுக்கு காரணமாக இருந்தது என்று பல்வேறு பிரிவுகளில் பூனம் பாண்டே மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

 

கிரிக்கெட்டில் இந்தியா வென்றால் நிர்வாணமாக காட்சியளிப்பேன் என கூறி பரபரப்பை ஏற்படுத்தியவர் பூனம் பாண்டே. அவ்வப்போது சமூக ஊடகங்களில் அதிரடியான படங்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார்.ஆண் நண்பருடன் மரியம் ட்ரைவில் சுற்றிய வீடியோ அவருக்கு இப்போது சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.


Leave a Reply