தமிழகத்தில் 34 வகையான கடைகள் இன்று திறப்பு!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


கொரொனா தடுப்பு நடவடிக்கையாக மார்ச் 24ஆம் தேதி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்த நிலையில், தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பை தொடர்ந்து 34 வகையான தனிக் கடைகள் இன்று திறக்கப்படுகின்றன. டீ கடைகள், பேக்கரிகள், பூ, பழம், காய்கறி, பலசரக்கு கடைகள், கட்டுமானப் பொருட்கள் விற்பனை கடைகள், சிமெண்ட், ஹார்ட்வேர் கடைகள் இன்று திறக்கப்படுகின்றன.

 

மின்சாதன பொருட்கள் விற்பனை, மொபைல் போன் விற்பனை,பழுது நீக்குதல், கணினி விற்பனை, வீட்டு உபயோக இயந்திரங்கள் மற்றும் பொருட்கள் விற்பனை மோட்டார் எந்திரங்கள் விற்பனை, கண் கண்ணாடி கடைகளையும் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

 

ஏசி வசதி இல்லாத சிறிய ரக நகைக்கடைகள், ஊரகப் பகுதிகளில் சிறிய ரக ஜவுளிக்கடைகள், மிக்ஸி கிரைண்டர் பழுது நீக்கும் கடைகள், விற்பனை பழுது நீக்கும் கடைகள், பர்னிச்சர் கடைகள் ஆகியவை இன்று திறக்கப்படுகின்றன.

 

இது தவிர சாலையோர தள்ளுவண்டி கடைகள், உலர் சலவையகம், கூரியர் பார்சல் சர்வீஸ், லாரி புகிங் ஆபீஸ், ஜெராக்ஸ் கடைகள் இருசக்கர, நான்கு சக்கர வாகன விற்பனை, மற்றும் பழுது நீக்கும் மையங்கள், நாட்டு மருந்து கடைகள், விவசாயஇடுபொருள், பூச்சி மருந்து விற்பனை கடைகள், டைல்ஸ் பெயிண்ட் எலக்ட்ரிகல்ஸ் கடைகள், ஆட்டோமொபைல் உதிரிபாகங்கள், நர்சரி கார்டன் கள், மரக்கடை- பிளைவுட் விற்பனை ஆகியவையும் திறக்கப்படுகின்றன.

 

அதேநேரம் முடி திருத்தும் கடைகள், ஸ்பா மற்றும் அழகு நிலையங்கள் திறக்க அனுமதி இல்லை என தமிழக அரசு அறிவித்துள்ளது. கடைகளில் குளிர்சாதன வசதி இருந்ததால் கடை உரிமையாளர்கள் அதை இயக்கக் கூடாது என்றும் தமிழ்நாடு அரசு சுட்டிக்காட்டியுள்ளது.

 

தனிநபர் இடைவெளியை கடைபிடித்தல், கிருமி நாசினி தெளிப்பு மற்றும் வாடிக்கையாளர்கள் முகக் கவசம் அணிவது உள்ளிட்ட வழிகாட்டு நெறிமுறைகளை கடை உரிமையாளர்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்றும் தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.


Leave a Reply