சென்னையில் கோர தாண்டவமாடி வரும் கொரோனா: இன்று நோய் தொற்று உறுதி செய்யப்பட்ட 669 பேரில் “சென்னையில் மட்டும் 509 பேருக்கு கொரோனா தொற்று!”

Publish by: செய்திப்பிரிவு --- Photo :


தமிழகத்தில் கடந்த சில தினங்களாக கொரோனா வைரசின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.இதில் சென்னையில் கொரோனா வைரஸ் கோர தாண்டவமாடி வருகிறது. தமிழகத்தில் இன்று மட்டும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டோரில் சென்னையில் மட்டும் 509 பேருக்கு கொரோனா தொற்று உள்ளது. இன்று சென்னையில் மட்டும் அதிகபட்சமாக 509 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

 

அதனைத் தொடர்ந்து திருவள்ளூரில் 47 பேருக்கும்,செங்கல்பட்டில் 43 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.அரியலூரில் 4,காஞ்சிபுரத்தில் 8,கிருஷ்ணகிரி 10 ,மதுரை 4 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும்,பெரம்பலூரில் 9, ராணிப்பேட்டையில் 6 , தேனியில் 4 , நெல்லையில் 10 , வேலூரில் 3 , விழுப்புரத்தில் 6 , விருதுநகரில் 2 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், கடலூர், கரூர், புதுக்கோட்டை,ராமநாதபுரம்,திருப்பத்தூரில் தலா ஒருவருக்கு என இன்று மட்டும் 669 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

 

தமிழகத்தில் இன்று மட்டும் 669 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 7204 ஆக உயர்ந்துள்ளது.


Leave a Reply