சொந்த ஊர் திரும்பியவர்களின் பேருந்தும், தண்ணீர் லாரியும் மோதி விபத்து!

Publish by: செய்திப்பிரிவு --- Photo :


கரூர் அருகே ஊரடங்கு காரணமாக சொந்த ஊர் திரும்பியவர்கள் பேருந்தும் தண்ணீர் லாரியும் மோதிக் கொண்டதில் 25 பேர் காயமடைந்தனர். பெங்களூரில் தங்கி பணியாற்றியவர்கள், மாணவர்கள் என 25 பேர் ஊரடங்கு காரணமாக சொந்த ஊர் திரும்பும் பொருட்டு போலீசிடம் அனுமதி பெற்று கேரள மாநிலம் கோட்டயத்திற்கு சுற்றுலா பேருந்தில் திரும்பிக் கொண்டிருந்தனர்.

 

கரூர் அருகே ராம் நகர் பிரிவில் சென்று கொண்டிருந்தபோது தண்ணீர் லாரி மீது பேருந்து மோதி விபத்திற்குள்ளானது. இதில் பேருந்தின் முன்பகுதி சேதம் அடைந்த நிலையில் அதிலிருந்து 25 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.


Leave a Reply