கடந்த 40 நாட்களுக்கும் மேலாக நலிந்தோர்க்கு நிவாரண உதவிகளை வழங்கி வரும் கோவை மக்கள் நீதி மையத்தினர் !!!

Publish by: கோவை விஜயகுமார் --- Photo :


கடந்த நாற்பது நாட்களாக மக்கள் நீதி மய்யம் சார்பாக கோவை மேற்கு மாவட்ட தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் மக்கள் நீதி மையத்தினர் கொரோனாவால் வேலையில்லாமல் திண்டாடி வரும் நலிந்தோர்க்கு மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமல் மற்றும் துணை தலைவர் ஆணைக்கிணங்க தொண்டாமுத்தூர், கிணத்துக்கடவு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வசிக்கும் குடும்பங்களுக்கு 7 நாட்களுக்கு தேவையான அரிசி, பருப்பு, காய்கறிகள், மஞ்சள் தூள், மல்லி மிளகாய் தூள், மற்றும் முககவசம் ஆகியவற்றை கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் முன்னிலையில் வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிகழ்ச்சியில் மக்கள் நீதி மையத்தின் கோவை மேற்கு மாவட்ட செயலாளர் சிட்கோ சிவா,
மாநில செயலாளர் தங்கவேல் கலந்து கொண்டு நிவாரண உதவிகளை வழங கினர்.இதில் மண்டல செயலாளர் மயில்சாமி,ஒருங்கிணைப்பாளர் ரங்கநாதன்,குறிச்சி நகராட்சி செயலாளர் மு. வினோபா, மதுக்கரை ஒன்றிய செயலாளர் விஜயகுமார், குனியமுத்தூர் செயலாளர் மோகன்ராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள்,களப்பணியாளர்கள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.


Leave a Reply