விஷவாயு கசிந்த ரசாயன ஆலைக்கு ஆலைக்கு 50 கோடி ரூபாய் அபராதம்

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் ரசாயன ஆலையில் விஷவாயு கசிந்து 11 பேர் உயிரிழந்த விவகாரத்தில் எல்ஜி பாலிமஸ் நிறுவனம் 50 கோடி ரூபாய் இடைக்கால அபராதம் செலுத்த வேண்டும் என்று தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுதொடர்பான வழக்கில் மத்திய அரசு எல்‌ஜி பாலிமஸ் நிறுவனம் மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஆகியவற்றுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

 

மேலும் உயிர் சேதத்திற்காக எல்ஜி பாலிமஸ் நிறுவனத்திற்கு முதற்கட்டமாக 50 கோடி ரூபாய் செலுத்த தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது. இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த அமைக்கப்பட்டுள்ள 5 பேர் கொண்ட குழுவினர் தங்களின் அறிக்கையை வருகிற 18-ஆம் தேதி சமர்ப்பிப்பார்கள் என்றும் கூறப்படுகிறது.


Leave a Reply