--- --:--:-- --

மதுரையில் தனிமனித இடைவெளியை பின்பற்றாத 9 கடைகளுக்கு சீல் !

12

மதுரையில் உள்ள மொத்த காய்கறி சந்தையில் தனிமனித இடைவெளியை பின்பற்றாமல் இருந்த 9 காய்கறி கடைகளுக்கு மாவட்ட ஆட்சியர் சீல் வைத்தார். மதுரையின் முக்கிய காய்கறி சந்தையான பரவை காய்கறி சந்தையில் மொத்த வியாபாரத்திற்கு மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளது.

 

இந்த நிலையில் மதுரை மாவட்ட ஆட்சியர் வினய் காய்கறி சந்தையில் ஆய்வு செய்தார். அப்போது அனுமதியின்றி திறக்கப்பட்ட இரண்டு டீ கடைகள் மற்றும் தனிமனித இடைவெளியை கடைபிடிக்காத 9 காய்கறி கடைகளை பூட்டி சீல் வைத்தார்.

 

இந்நிலையில் காய்கறி சந்தையானது புதுவிளாங்குடி பகுதியில் உள்ள பாத்திமா கலைகல்லூரி மைதானத்தில் தற்காலிகமாக மாற்றப்பட்டு இன்று முதல் செயல்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. தற்காலிக சந்தையில் 81 கடைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் மொத்த விற்பனைக்கு மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon