--- --:--:-- --

கென்யாவில் வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 194 பேர் உயிரிழப்பு!

11

ஆப்பிரிக்க நாடான கென்யாவில் ஏற்பட்ட மழை வெள்ளத்தினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 200 ஐ நெருங்கியுள்ளது. மேற்கு பகுதியிலுள்ள படலங்கி என்ற இடத்தில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருவதால் அப்பகுதியில் ஓடும் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் அங்கிருந்த மலைப்பகுதியிலும் அடுத்தடுத்த நிலச்சரிவுகள் ஏற்பட்டன.

 

வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை 194 பேர் உயிரிழந்துள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. வெள்ளப்பெருக்கு காரணமாக ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் குடியிருப்புகளை காலி செய்து விட்டு பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் அடைந்துள்ளனர். வெள்ளத்தில் சிக்கிய பலர் மாயமாகியுள்ளனர். உயிரிழப்பு அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon