பள்ளி, கல்லூரிகளை திறந்தால் மாணவர்களுக்கு பாதுகாப்பு இருக்குமா?

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


கொரொனா பாதிப்பால் உலகம் முழுவதும் பள்ளிகள் கல்லூரிகள் மூடப்பட்டு உள்ளதால் அவை மீண்டும் திறக்கப்படும் போது மாணவர்களை பாதுகாப்பது எப்படி என யுனஸ்கோ போன்ற உலக வங்கி உள்ளிட்ட அமைப்புகள் சிறந்த வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளன.

 

உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 154 கோடி மாணவர்கள் வீடுகளுக்குள் முடங்கிக் கிடக்கின்றனர். எனவே மாணவர்களின் பாதுகாப்புக்காக பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டு இருக்கும் சூழலில் அவர் மீண்டும் எப்படி திறக்கப்பட வேண்டும் என்ற கேள்விக்கு விடை காண ஐநா சபையின் துணை அமைப்புகள் முயன்று வருகின்றன.

 

இந்தியாவைப் பொருத்தவரை பள்ளி, கல்லூரிகளில் வகுப்புகள் மாணவர்களில் தனித்தனியாக இடைவெளிவிட்டு அமர வைப்பது வகுப்புகளுக்கான நேரத்தை குறைப்பது ஆன்லைன் வகுப்புகள் அதிகப்படுத்துவது மாணவர்களை படிப்பதற்கும், எழுதுவதற்கும் மட்டும்தான் வகுப்பு என்ற நிலையை மாற்றி பல்வேறு சமூகப் பணிகளில் ஈடுபடுத்துவது விடுதிகளிலும் காட்சிகளிலும் கட்டுப்பாடுகளை விதிப்பது உள்ளிட்ட பல்வேறு சட்டங்கள் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன.


Leave a Reply