--- --:--:-- --

மீண்டும் சரியும் தங்கம் விலை..!

1

நவம்பர் மாத தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலை அதிகம் சரிந்து வருகிறது. கடந்த 4 நாட்களுமே தங்கம் விலை தொடர் சரிவை கண்டு வருகிறது. 4 நாட்களில் மட்டுமே சவரனுக்கு ரூ.4,480 குறைந்துள்ளது நகை பிரியர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

நேற்றைய நிலவரப்படி, 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.200 குறைந்து ஒரு கிராம் ரூ.12,815க்கும், சவரனுக்கு ரூ.1600 குறைந்து ஒரு சவரன் ரூ.1,02,520க்கும் விற்பனை செய்யப்பட்டது.
தொடர்ந்து இன்றும் தங்கம் விலை அதிரடியாக குறைந்துள்ளதால் நகை பிரியர்கள் உச்சக்கட்ட மகிழ்ச்சியடைந்துள்ளனர். மீண்டும் ஒரு சவரன் தங்கம் விலை ரூ.1 லட்சத்திற்கும் கீழ் குறையும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

 

அதன் படி 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.120 குறைந்து ஒரு கிராம் ரூ.12,695க்கும், சவரனுக்கு ரூ.960 குறைந்து ஒரு சவரன் ரூ.1,01,560க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதே போல 18 காரட் தங்கம் விலையும் கிராமுக்கு ரூ.160 குறைந்து ஒரு கிராம் ரூ.10,490க்கும், சவரனுக்கு ரூ.1,280 குறைந்து ஒரு சவரன் ரூ.83,920க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.5 குறைந்து ஒரு கிராம் ரூ.195க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 95 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon