வெளிநாடுகளில் தவிக்கும் இந்தியர்கள் மே 7 முதல் அழைத்து வரப்படுவர்

வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்கும் பணி வரும் 7ஆம் தேதி தொடங்க உள்ளது. அமெரிக்கா, வளைகுடா நாடுகள், சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளில் ஆயிரக்கணக்கான இந்தியர்கள் சிக்கி தவித்து வருகின்றனர்.

 

இவர்கள் விமானங்கள் மூலம் கடற்படை கப்பல்களும், மருத்துவ விதிமுறைகளை பின்பற்றி பல்வேறு கட்டங்களாக அழைத்து வரப்படுவார்கள் என அரசு தெரிவித்துள்ளது. கொரொனா அறிகுறி எதுவும் இல்லாதவர்கள் மட்டுமே அழைத்து வரப்படுவார்கள் என்றும் அவர்கள் இந்தியா வந்த பின் 14 நாட்கள் தனிமைப்படுத்த படுவார்கள் என்றும் அரசு தெரிவித்துள்ளது.

 

14 நாட்களுக்குள் பரிசோதனை செய்யப்பட்ட தொற்று இல்லாதவர்கள் அவரவர் ஊர்களுக்கு அனுப்பப்படுவார்கள் என்றும் அரசு தெரிவித்துள்ளது. இந்த நடைமுறை குறித்த விரிவான விளக்கங்கள் விரைவில் வெளியுறவுத்துறை அமைச்சக வலைதளத்தில் இடப்படும் என்றும் அரசு தெரிவித்துள்ளது.


Leave a Reply