நெடுஞ்சாலை டெண்டர் முறைகேடு: ஊழலில் இருந்து யாரும் தப்பிவிட முடியாது

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


பொது முடக்க நேரத்திலும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான நெடுஞ்சாலைத் துறையின் முறைகேடுகள் உயர்நீதிமன்றத்தில் அம்பலமாகி இருப்பதாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

 

தஞ்சை மாவட்டத்தில் 402 கிலோமீட்டர் நீள நெடுஞ்சாலைத்துறை சாலைகளை ஐந்து வருடங்கள் பராமரிக்க டெண்டர் வெளியிடப்பட்டதில் உரிய வழிமுறைகள் பின்பற்றப்படவில்லை என ஒப்பந்ததாரர் ஒருவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள மனுவில் மு க ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

அரசாணையில் உள்ள பணியின் ரூபாய் மதிப்பிற்கும், டெண்டரில் உள்ள பணியின் ரூபாய் மதிப்பிற்கும் வேறுபாடு இருக்கிறது என மனுதாரர் கூறியிருப்பதாக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பொதுமுடக்கம் அமலில் இருக்கும் போது சாலை பராமரிப்புக்காக ஐந்து வருட பணிகளுக்கு டெண்டர் விடுவதற்கு துறை அமைச்சரான முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவசரம் காட்டியது ஏன் என அவர் வினவியுள்ளார்.

 

இந்த வழக்கை நிச்சயம் உயர் நீதிமன்றம் விசாரிக்க தான் போகிறது என்றும் அப்போது டெண்டர் முறைகேடுகள் வெளிச்சத்துக்கு வரத்தான் போகிறது என்றும் ஸ்டாலின் தெரிவித்தார். எந்த ஊரில் இருந்தும் யாரும் தப்பி விட முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.


Leave a Reply