தொங்கும் ஏணியில் ஊசலாடிய தொழிலாளர்களின் உயிர்!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


அமெரிக்காவில் அடுக்குமாடி குடியிருப்பில் கண்ணாடியை கழுவி கொண்டிருந்தவர்கள் திடீரென ஏற்பட்ட சூறாவளியில் சிக்கி உயிருக்கு போராடிய வீடியோ வெளியாகியுள்ளது.புளோரிடா மாகாணத்தில் கடற்கரையை ஒட்டியிருந்த அடுக்குமாடி குடியிருப்பில் தொழிலாளர்கள் சிலர் கண்ணாடிகளில் இருந்த தூசியை அகற்றி அதனை கழுவி கொண்டிருந்தனர்.

 

அப்போது திடீரென கடற்பகுதியில் ஏற்பட்ட சூறாவளியால் தொழிலாளர்கள் பணி செய்து கொண்டிருந்த ஏணி ஆட்டம் கண்டது. நேரம் செல்லச் செல்ல காற்றின் வேகம் அதிகரித்து மணிக்கு 75 கிலோ மீட்டர் வேகத்தில் வீச தொடங்கியது. இதில் சிக்கிய தொங்கும் ஏணி கட்டடத்தில் மோதியதோடு அங்குமிங்கும் அலைக் கழிக்கப்பட்டது. சுமார் 20 நிமிடங்களுக்கு பின்னர் காற்றின் வேகம் குறைந்ததால் தொங்கும் ஏணியிலிருந்து 5 தொழிலாளர்களும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.


Leave a Reply