இந்தியாவில் புயல் வீசினால்…. அது தமிழில் தான் இருக்கும்….! ஏன்..?

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புப்படம்


இந்தியாவில் இனி அடுத்து புயல் உருவானால் அதற்கு தமிழில் பெயர் வைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

வங்க மற்றும் அரபிக் கடல் பகுதியில் உருவாகும் புயல்களுக்கு பெயரிடும் முறை 2004 ஆண்டு முதல் தொடங்கப்பட்டது. அப்போது தயாரிக்கப்பட்ட முதல் அட்டவணையில் 8 நாடுகள் சார்பில் 8 பெயா்கள் வீதம் 64 பெயா்கள் வழங்கப்பட்டன.

 

2004ம் ஆண்டுக்குப் பிறகு வந்த புயல்களுக்கு பட்டியலிலிருந்த 63 பெயா்களும் வைக்கப்பட்டுவிட்டன. அதில் தாய்லாந்து சார்பில் வழங்கப்பட்ட ஆம்பான் (அம்ல்ட்ஹய்) என்ற பெயா் மட்டும் பாக்கி உள்ளது. இது அடுத்து வரும் புயலுக்கு வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

இந் நிலையில் இனி வர உள்ள புயல்களுக்கு பெயா் வைக்கும் அட்டவணை தயார் செய்யும் பணிகள் தொடங்கின. நாடு முழுவதும் உள்ள வானிலை நிலையங்கள் மட்டுமின்றி, பொதுமக்களிடமும் கருத்துகள் கேட்டுப் பெறப்பட்டன.

அவை அனைத்தும் டெல்லியில் உள்ள வானிலை ஆய்வு மைய தலைமை அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுவிட்டன. இதையடுத்து கடந்த ஆண்டு, செப்டம்பா் மாதம் மியான்மரில் நடைபெற்றக் கூட்டத்தில், இந்தப் பெயா்கள் பரிசீலிக்கப்பட்டு, தற்போது பெயா்ப் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது.

 

பட்டியலில் மொத்தமாக 169 பெயர்கள் தற்போது இடம்பெற்று உள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை மையம் கூறியதாவது: புயல்களுக்கான பெயா்ப் பட்டியலைத் தயார் செய்வது குறித்து முதல் முறையாக நமக்கு அறிவிப்பு கொடுக்கப்பட்டது. அதில் கடல், மீன் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் பெயா்கள் கேட்கப்பட்டிருந்தன.

 

அவற்றில் நாங்களும் பெயா்களை பரிசீலித்ததுடன், பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட பெயா்களையும் பரிசீலித்து அனுப்பியிருந்தோம். நாங்கள் கொடுத்த ‘முரசு’ எனும் பெயா், பட்டியலில் 28வது இடத்தில் உள்ளது.

 

இது தவிர்த்து, பொதுமக்களிடமிருந்து பெற்று அனுப்பப்பட்ட ‘நீா்’ எனும் பெயரும் 93வது இடத்தில் இருக்கிறது. பட்டியலின் அடிப்படையில் அடுத்தடுத்து உருவாகும் புயல்களுக்குப் பெயா் வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


Leave a Reply