--- --:--:-- --

கொரொனா அறிகுறியின்றி மாங்காடு உதவி ஆய்வாளருக்கு கொரோனா பாதிப்பு!

2

திருவள்ளூர் மாவட்டம் மாங்காடு காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் சிறப்பு உதவி ஆய்வாளர் ஒருவருக்கு கொரொனா உறுதியாகியுள்ளது. அவர் தங்கியுள்ள மதுரவாயில் காவலர் குடியிருப்பில் உள்ளவர்கள் தனிமைப் படுத்தப் பட்டுள்ளனர். அந்த பகுதி முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு உள்ளது.

 

கொரொனா உறுதியான காவலருக்கு எந்த அறிகுறியும் தெரியாததால் மற்ற காவலர்கள் அவருடன் வழக்கம் போல பழகி வந்துள்ளனர். மேலும் இவரும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளார். அதனால் மற்ற காவலர்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது.

 

சென்னையில் கொரொனா பரிசோதனை செய்த கூலித் தொழிலாளியை வீட்டிற்குள் அனுமதிக்க உரிமையாளர் மறுத்ததால் சாலையில் தங்கியிருந்த அவர் பரிதாபமாக உயிரிழந்தார். சென்னை குமரன் நகரை சேர்ந்த 56 வயதான கூலித் தொழிலாளிக்கு ஆஸ்துமா பிரச்சனை உள்ளது.

 

இதனால் அவரை கொரொனா பரிசோதனை செய்யுமாறு வீட்டின் உரிமையாளர் அறிவுறுத்தியுள்ளார். பரிசோதனை முடிவு வரும் வரை வீட்டில் தங்க வேண்டாம் என உரிமையாளர் தெரிவித்ததாகவும் இதனால் கூலித்தொழிலாளி சாலையோரம் தங்கி இருந்ததாகவும் கூறப்படுகிறது.

 

இந்த நிலையில் அவர் திடீரென உயிரிழந்துள்ளார். உடலை மீட்டு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடைய கூலித்தொழிலாளியின் பரிசோதனை முடிவில் அவருக்கு கொரொனா இல்லை என்பது தெரியவந்தது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon