கொரொனா பாதித்த மருத்துவரால் தனிமைப்படுத்தப்பட்ட கிருஷ்ணகிரி நகரம்..!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


கொரொனா பாதித்த மருத்துவர் வந்து சென்றதால் கிருஷ்ணகிரி நகரம் முழுவதும் தனிமை படுத்தப்பட்டு உள்ளது. கிருஷ்ணகிரி- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள குடியிருப்பில் வசிக்கும் டாக்டர் ஒருவர் கடந்த 24ஆம் தேதியன்று கிருஷ்ணகிரியில் உள்ள மனைவி வீட்டிற்கு சென்று உள்ளார்.

 

அவருக்கு சந்தேகத்தின் அடிப்படையில் நடத்தப்பட்ட சோதனையில் கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து கிருஷ்ணகிரியில் உள்ள அவரது மனைவியின் வீடு, டாக்டர் சென்ற கடைகளின் இடங்கள் உட்பட ஐந்து கிலோமீட்டர் தொலைவிற்கு கிருஷ்ணகிரி நகரம் சீல் வைக்கப்பட்டு அங்கு வசித்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.


Leave a Reply