ஒரே நபர் மூலம் மேலும் 13 பேருக்கு கொரோனா பரவல்!
சென்னை திரு வி க நகர் மண்டலத்திற்கு உட்பட்ட பெரம்பூர் தீட்டி தோட்டம் பகுதியில் கொரொனாவால் பாதிக்கப்பட்ட ஒரே நபர் மூலம் 13 பேருக்கு தொற்று பரவியுள்ளது. வார இதழ் ஒன்றில் பணிபுரியும் நபர் உடல்நலக்குறைவால் அனுமதிக்கப்பட்டிருந்த தனது மாமனாரை பார்க்க அடிக்கடி மருத்துவமனைக்கு சென்று வந்த நிலையில் கடந்த 5 நாட்களுக்கு முன்பு அவருக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அவர் மூலமாக அவரது மனைவி, மகனுக்கு தொற்று பரவியது. அவர்கள் வசிக்கும் பகுதியில் உள்ளவர்களுக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் மேலும் 11 பேருக்கு கொரொனா உறுதியாகியுள்ளது. ஒருவர் மூலமாக மேலும் 13 பேருக்கு கொரொனா பாதிப்பு உறுதியாகி உள்ளதால் தீட்டி தோட்டம் மூன்றாவது தெரு முழுவதுமாக தனிமைப் படுத்தப் பட்டுள்ளது.






