--- --:--:-- --

மளிகை சாமான் வாங்க போனவர் மணமகனாக வந்தார்..! அதிர்ச்சியில் உறைந்த தாய்…!

VCZCX

உத்தர பிரதேசத்தில் கடைக்கு காய்கறி வாங்க சென்ற மகன், கல்யாணம் செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உள்ளது. அவசியம் இன்றி எதற்காகவும் வெளியே செல்ல அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் உத்தர பிரதேசம் காசியாபாத் பகுதியை சேர்ந்த ஹூடு என்பவரை மளிகை பொருட்கள் வாங்க கடைக்கு அனுப்பி இருக்கிறார் அவரது தாயார்.

 

ஹூடு ஏற்கனவே சுவேதா என்ற பெண்ணை காதலித்து வந்தார். யாருக்கும் தெரியாமல் கோவிலில் திருமணம் அவர்கள் இருவரும் செய்து கொண்டிருக்கின்றனர். அவர்களின் திருமண சான்றிதழ் கிடைக்க இதுவரை காத்து இருந்துள்ளனர்.

 

அதுவரை சுவேதாவை டெல்லியில் உள்ள ஒரு வீட்டில் வாடகைக்கு தங்க வைத்துள்ளார் ஹூடு. இந்நிலையில் அந்த வீட்டின் உரிமையாளர் சுவேதாவை வீட்டை காலி செய்ய தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளார். இது குறித்து அறிந்த ஹூடு மளிகை பொருட்கள் வாங்க வெளியே சென்ற போது அதை வாய்ப்பாக பயன்படுத்து நேராக டெல்லி சென்று சுவேதாவை அழைத்துக் கொண்டு காசியாபாத் வந்துள்ளார்.

 

மளிகை சாமான் வாங்க சென்ற மகன் திருமண கோலத்தில் வந்து நின்றதை கண்ட ஹூடுவின் தாய் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளார். அவர்களை வீட்டிற்குள் அனுமதிக்காமல் வெளியே நிற்க வைத்துள்ளார்.தகவலறிந்த காசியாபாத் போலீஸார் அங்கு விரைந்து ஹூடுவின் தாயாரிடம் சமாதான பேச்சு வார்த்தை செய்ய முயற்சித்தனர்.

 

ஆனால் அவர் பிடிவாதமாக இருந்ததால் ஹூடு தம்பதியினர் டெல்லியில் இருந்த வாடகை வீட்டிற்கே திரும்ப அனுப்பப்பட்டனர். மளிகை பொருட்கள் வாங்க சென்று மணம் செய்து வந்த ஹூடுவின் சம்பவம் காசியாபாத்தில் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon