தமிழகத்தில் கொரோனா இல்லாத முதல் மாவட்டம்…! அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு
தமிழகத்தில் கொரோனா தாக்குதலில் இருந்து விடுபட்ட முதல் மாவட்டம் என்ற பெயரை நீலகிரி பெற்றுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் அதிகபட்சமாக டெல்லிக்கு சென்று வந்த 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர்களின் உறவினர்கள் 2 பேருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.
ஆகையால் மொத்தமாக 9 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இருந்தனர். அனைவரும் கோவையில் உள்ள இ.எஸ்.ஐ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் வசித்துவந்த ஊட்டி, குன்னூர், கோத்தகிரி ஆகிய பகுதிகள் சீல் வைக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டது.
இந் நிலையில் அவர்கள் அனைவரும் கொரோனாவில் இருந்து மீண்டு விட்டதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. கடைசி நபரும் நேற்று கொரோனாவில் இருந்து மீண்டதால் கொரோனாவை வென்ற தமிழகத்தின் முதல் மாவட்டம் என்ற பெயர் நீலகிரி மாவட்டத்துக்கு கிடைத்துள்ளது.






