--- --:--:-- --

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர், மருத்துவமனையில் தற்கொலை!

10

பெங்களூரில் கொரொனா தொற்றால் பாதிக்கப்பட்டவர் மருத்துவமனை மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிறுநீரக பிரச்சனை உள்ள 50 வயது நபருடன் கடந்த வெள்ளிக்கிழமை விக்டோரியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

 

அவருக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் மருத்துவமனையின் ஐந்தாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவித்தனர். தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

 

கொரொனா பெருந்தொற்று அபாயம் இன்னும் முடியவில்லை என உலக சுகாதார அமைப்பின் தலைவர் தெரிவித்துள்ளார். ஜெனிவாவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் covid-19 நோய் காரணமாக உலகில் பலர் உயிரிழந்துள்ளனர் என்றார். கொரொனா பெருந்தொற்று ஆப்பிரிக்கா, ஐரோப்பா, அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய நாடுகளில் அதிக அளவில் பெருகி வருவதாக டெட்ராஸ் கவலை தெரிவித்தார்.

 

நாம் அனைவரும் ஒற்றுமையாக இல்லாவிட்டால் கொரொனாவைரசை ஒழிக்க முடியாது என்றும் நம்மிடையே உள்ள பிளவுகள் வழியாக வைரஸ் பரவி பெரும் ஆபத்தை ஏற்படுத்தும் என்றும் கூறினார்.

 

பொதுமுடக்கத்தை தளர்வு செய்யும்போது சரியான இடைவெளியுடன் அமல்படுத்த வேண்டும் என்றும் இல்லையேல் இரண்டாவது பரவல் ஏற்பட்டு மீண்டும் பொது முடக்கம் அமல்படுத்த வேண்டிய நிலை ஏற்படும் எனவும் உலக சுகாதார அமைப்பின் செயல் இயக்குனர் மைத்ரேயா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon