கொரோனா பாதிப்பு…! கோயம்பேடு காய்கறி சந்தை மூடப்படுகிறது..?

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புப்படம்


சென்னை கோயம்பேடு சந்தையில் வியாபாரிகள் இருவருக்கு கொரோனா உறுதியான நிலையில், பாதிப்புகள் தொடர்ந்தால் சந்தையை மூட ண்டி வரும் என காவல்துறை ஆணையர் தெரிவித்துள்ளார்.

 

தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில் ஊரடங்கு அமலில் உள்ளது. அத்யாவசிய பொருட்கள் விற்கும் கடைகள் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றன.

இந்நிலையில் சென்னையில் பிரபலமான கோயம்பேடு மார்க்கெட் பகுதியில் 2 வியாபாரிகளுக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கோயம்பேடு மார்க்கெட்டை இடம் மாற்றுவது குறித்து இன்று மாநகராட்சி ஆணையர் ஆலோசித்த நிலையில் வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்ததால் ஆலோசனை கூட்டம் மீண்டும் நாளை நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

தொடர்ந்து பேசிய காவல்துறை ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன், ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நாள் முதல் ஒருநாள் கூட கோயம்பேடு மார்க்கெட்டில் சமூக இடைவெளி கடைபிடிக்கப்படவில்லை. 2 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. மேலும் 4 பேருக்கு கொரோனா இருப்பது தெரியவந்தால் கோயம்பேடு மார்க்கெட்டை மூட வேண்டி வரும் என்றார்.

 


Leave a Reply